இனிய திருமண வாழ்கைக்கு 10 வழிகள்

இனிய திருமண வாழ்கைக்கு 10 வழிகள்.

உங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை நேசியுங்கள்

ஒன்றாக இறைவனை வழிபடுங்கள்

நீங்கள் ஒருவர் மறோருவரை நேசிப்பதை விட இறைவனை அதிகமாக நேசியுங்கள்

உங்களில் ஒருவர் மற்றொருவரை சந்தொஷபடுதுவார் என்று எதிர் பார்க்கவேண்டாம்

செய்த  தவறை நியாயப்படுதவேண்டாம் .

உங்கள் நிதி நிலைமையை கலந்து ஆலோசியுங்கள்

ஒருவருக்கொருவர் விட்டுகொடுங்கள் , மன்னிப்பை ஏற்றுகொள்ளுங்கள் .

ஒருவர் பேசும்பொழுது மதித்து சொல்வதை கவனமாக கேளுங்கள் .

பழைய சுகமான நினைவுகளை புதுப்பித்துகொல்லுங்க .

பெரியவர்களின் அறிவுரைகளை மதித்து நடக்கவும்.

உன்னதமான உறவு *****

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும்
உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை ,
இது ஒரு தெய்விகமான உறவு . 

இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் ,
தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான 
உறவுகள் பல உடைந்து போகின்றது .

ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம் ,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாலோ அங்கே ஒரு பிடரி 
ஜெயித்ததாக பொருள் .

தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும் நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது .